Deutsch | Italiano | Français | English | Español | Português | Srpsko-hrvatski/Bosanski | Shqip | தமிழ் | Türkçe | العربية

கடன் வசூலும் பற்று மூலம் பிடித்தமும்

நீண்டகாலமாக கடன்களை செலுத்தாமல் இருப்பவரது சொத்துக்கள் கடன் வசூல் அமைப்புகளால் பற்றுக்கு மாட்டும் அபாயம் பெரிய அளவில் உண்டு.

சம்பந்தப்பட்டக் கடனாளிகளிடம் குறிப்பிடத்தக்க அளவில் சொத்துக்கள் இல்லையெனும் பட்சத்தில் அவர்களது வருமானம் (சம்பளம், சமூக காப்புறுதியிடமிருந்து வரும் பணப்பட்டுவாடாக்கள்) ஆகியவை பற்றுக்கு உட்படுத்தப்படும். கடன் வசூல் செய்யும் அமைப்பின் அதிகாரி கடனாளிக்குத் தேவையான குறைந்தபட்ச வாழ்வாதாரத்தைக் கணக்கிடுவார் (அதைக் கணக்கிடும் வரைமுறைகளை அந்த அமைப்பு உருவாக்கியுள்ளது). அந்த வாழ்வாதாரம் போக எஞ்சிய கடனாளியின் வருமானத்தை நேரடியாக கடன் வசூல் செய்யும் அமைப்புக்கு அனுப்புமாறு அந்த அதிகாரி கடனாளியின் முதலாளிக்கோ அல்லது காப்புறுதி செய்த நிறுவனத்துக்கோ தாக்கீது?? அனுப்புவார். சில நேரங்களில் சம்பந்தப்பட்ட அக்கடனாளியே அத்தொகையை கடன் வசூல் செய்யும் அலுவலகத்துக்கு அனுப்பும் வாய்ப்பும் உண்டு.